பாலியல் குற்றங்களுக்கு காரணம் இன்டர்நெட்தான் - நடிகர் விவேக்

தற்போது உள்ள இளைஞர்கள் மொபைல் இண்டர்நெட் மூலம் தங்கள் வயதை தாண்டி தெரிந்து கொள்ள கூடாத விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர் - நடிகர் விவேக்

news18
Updated: January 12, 2019, 5:10 PM IST
பாலியல் குற்றங்களுக்கு காரணம் இன்டர்நெட்தான் - நடிகர் விவேக்
நடிகர் விவேக்
news18
Updated: January 12, 2019, 5:10 PM IST
இளைஞர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதால்தான் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று நடிகர் விவேக் குற்றம்சாட்டினார்.

சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்தரின் 156-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில்  விவேக் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை விவேக் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த விவேக் கூறியதாவது:  இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை தட்டி எழுப்பியவர் விவேகானந்தர்.  என்னுடைய வாழ்வில் விவேகானந்தரை எடுத்துக்காட்டாய் வைத்து தான் வாழ்ந்து வருகிறேன். உதவி என்பது வெளியில் இருந்து வருவதில்லை உன்னுள் இருந்து வருகிறது என்பது விவேகானந்தரின் கூற்று.

இதுவரை, நாடு முழுவதும் 30 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இந்த பயணம் தொடரும். விவேகானந்தரின் காலத்தில் பெண்களை தாயாக பார்த்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் தங்கள் வயதை தாண்டி, தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். இன்டர்நெட்டை தேவை அறிந்து பயன்படுத்தினால் பாலியல் குற்றங்கள் குறையும் என்றார் விவேக்.

டிரெண்டிங் ஆன அஞ்ஞான சிறுகதைகள் - வீடியோ

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...