பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் காலமானார்.
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் மரணமடைந்துள்ளார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தாயார் பானுமதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கீரவாணியின் குடும்பத்தினர் பானுமதியின் உடலை எஸ்.எஸ்.ராஜமௌலியின் இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். ராஜமெளலி, கீரவாணியின் உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே.
சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த த்ரிஷா... குவியும் வாழ்த்துகள்!
RRR படத்தில் கீரவாணியின் 'நாட்டு நாடு' பாடல் உலகளாவிய பெருமையை அடைந்துள்ளது. குறிப்பாக கோல்டன் குளோப் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நேரத்தில் இசையமைப்பாளருக்கு ஒரு துக்கமான நிகழ்வு நடந்துள்ளது. சமீபத்தில், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் சர்வதேச விருது பெற்றார் கீரவாணி. 'பாகுபலி', 'பாகுபலி 2' மற்றும் 'ரௌத்ரம் ரணம் ருத்திரம்' ஆகிய பான்-இந்தியா திரைப்படங்களின் இசைக்காக ரசிகர்களால் கவனிக்கப்பட்ட கீரவாணி, இந்தியாவின் மிகவும் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Telugu movie