சில நிமிடங்களில் கிடைத்த பரிசு... இசைஞானியை சந்தித்த பாகுபலி இசையமைப்பாளர்!

எம்.எம்.கீரவாணி - இசைஞானி இளையராஜா

இளையராஜாவின் தீவிர ரசிகரான கீரவாணி, அவரின் பெருமைகளை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்வார்.

 • Share this:
  பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

  தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் எம்.எம்.கீரவாணி. இவர் தமிழில் மரகதமணி என்ற பெயரில், அழகன், வானமே எல்லை, நீ பாதி நான் பாதி, ஸ்டூடெண்ட் நம்பர் 1 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெரும்பாலான படங்களுக்கும் இவர் தான் இசையமைப்பாளர்.

  உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி, தற்போது ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். பாகுபலி படங்களுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இளையராஜாவின் தீவிர ரசிகரான கீரவாணி, அவரின் பெருமைகளை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்வார். இந்நிலையில் சென்னை வந்த அவர், இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு சென்று, அவரை சந்தித்துள்ளார். ஸ்டூடியோவுக்கு வெளியில் நின்று எடுத்த செல்ஃபியை பகிர்ந்த அவர், ’இந்த நாள் சிறப்பாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார். பின்னர் இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்த அவர், ’முன்பு சொன்னது போல் அந்த செல்ஃபிக்கு பலன் கிடைத்து விட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு இது எனக்கு பரிசளிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதையடுத்து எம்.எம்.கீரவாணியின் அந்த பதிவில் இளையராஜா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: