• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முகஸ்டாலின்

முகஸ்டாலின்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் ஈரோடை பூர்வீகமாக கொண்டவர். 1965ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.

    ஸ்ரீகாந்தின் வாழ்வில் முக்கிய அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ படம் திகழ்ந்தது. அந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீகாந்த் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். தற்காலப் படங்கள் பலவற்றிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவர், வயது முதிர்ச்சி காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    ஸ்ரீகாந்திக்கின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதரால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார். எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன்.

    பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். ஸ்ரீகாந்த்தை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: