Rajinikanth: 'தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது’ ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ரஜினி - மு.க.ஸ்டாலின்

தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    கலைத்துறையின் வழங்கப்படும் மிக உயரிய விருதான 51-வது தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார். அதன்படி தனது ஸ்டைலாலும் மாஸான நடிப்பாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    Rajinikanth: ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

    இந்த விருது தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. இது 2018-ல் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு ரஜினிகாந்தை தேர்வு செய்த நடுவர் மன்றத்தில் பாடகர்கள் ஆஷா போஸ்லே மற்றும் சங்கர் மகாதேவன், நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிஸ்வாஜீத் மற்றும் திரைப்பட இயக்குநர் சுபாஷ் காய் ஆகியோர் இருந்தனர்.



    ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது, கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: