தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் மத்திய சினிமா ஜூரி தலைவர் என்.சந்திரா மற்ற ஜூரி உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
இந்திய அரசியல் சாசன அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 18 வட்டார மொழிகளிலும் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதில் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் சிறந்த படமாக வெற்றிமாறனின் அசுரனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகரான தனுஷ் அறிவிக்கப்பட்டார்.
அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் (துணை நடிகர்) விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானும், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறப்பு ஜூரி சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷாலுக்கு (கருப்புதுரை) வழங்கப்படுள்ளது.
இந்நிலையில் தமிழில் தேசிய விருது பெறும் பிரபலங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “தேசிய விருது பெறும் தனுஷ், விஜய் சேதுபதி, ஆர்.பார்த்திபன், டி.இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள். அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன். மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.