முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலவை விமர்சனங்களைப் பெறும் பீஸ்ட்... விஜய் ரசிகர்களுக்கான படம் மட்டும்தானா?

கலவை விமர்சனங்களைப் பெறும் பீஸ்ட்... விஜய் ரசிகர்களுக்கான படம் மட்டும்தானா?

பீஸ்ட்

பீஸ்ட்

விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், நடனம், ஆக்சன், விடிவி கணேஷின் டைமிங் காமெடிகள், செல்வராகவனின் நடிப்பு, மிக முக்கியமாக அனித்தின் பாடல் மற்றும் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது.

  • Last Updated :

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஒரு தரப்பினர் விஜய்யை கொண்டாடினாலும், ஒரு தரப்பினர் படம் சுமாராக இருப்பதாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. கோலமாவு கோகிலா, டாக்டர் என ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் மற்றும் விஜய்யின் காம்போவில் படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ற வகையில் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, டைட்டில் சாங் ஆகியவை சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த படத்தையும் விஜய் மட்டுமே இழுத்துச் செல்கிறார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள், மத்திய அரசு, தீவிரவாதிகள் என விரிவான கதைக்களம் இருந்தாலும், அதனை நியாயப்படுத்தும் வகையில் திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் இல்லாதது குறையாக காணப்படுகிறது.

விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், நடனம், ஆக்சன், விடிவி கணேஷின் டைமிங் காமெடிகள், செல்வராகவனின் நடிப்பு, மிக முக்கியமாக அனித்தின் பாடல் மற்றும் பின்னணி இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

இதனை தவிர்த்து பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நடிகர்களுக்கு பெரிய ஸ்கோப் ஏதும் படத்தில் இல்லை. குறிப்பாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லன் ஏதும் இல்லாதது படத்திற்கு மைனஸாக மாறியுள்ளது.

First published:

Tags: Beast