முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணையும் மாதவன்! - வெளியான அப்டேட்!

திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணையும் மாதவன்! - வெளியான அப்டேட்!

மாதவன் - மித்ரன் ஜவஹர்

மாதவன் - மித்ரன் ஜவஹர்

திறமையான மற்றும் ரசிகர்களின் விருப்பமான நடிகர் மாதவன் நடிப்பில், எனது அடுத்த படத்தைத் தொடங்குகிறேன்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் ஜவஹர் அடுத்ததாக மாதவன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். 

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் மாதவன், இப்போது இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனது அடுத்தப் படத்திற்காக இணைய உள்ளார். திருச்சிற்றம்பலம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிகர் மாதவன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

”திருச்சிற்றம்பலத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, திறமையான மற்றும் ரசிகர்களின் விருப்பமான நடிகர் மாதவன் நடிப்பில், எனது அடுத்த படத்தைத் தொடங்குகிறேன். பாராட்டுக்குரிய மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது” என மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பெண்களை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்த மித்ரன் ஜவஹர், அதற்காக நயன்தாராவை அணுகியதாகவும், ஆனால் அதற்கு முன் மாதவன் படத்தில் பணியாற்றுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நடிகர் மாதவன் பதிவிட்டுள்ள பதிவில், "உங்களுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றவும், சிறந்த நேரத்தை செலவிட்டு, படத்தில் மேஜிக் செய்யவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Madhavan