காஜல் அகர்வாலுக்கு ரூ.75 லட்சம்... மோகத்தால் நடந்த நூதன மோசடி!

சில நாட்களுக்கு பின், தான் ஏமாற்றப்படுவதை அறிந்த தொழிலதிபர் மகன் பிரதீப், வாழ பிடிக்காமலும், அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

news18
Updated: July 31, 2019, 5:55 PM IST
காஜல் அகர்வாலுக்கு ரூ.75 லட்சம்... மோகத்தால் நடந்த நூதன மோசடி!
காஜல்
news18
Updated: July 31, 2019, 5:55 PM IST
காஜல் அகர்வாலை அழைத்து வருவதாக கூறி தொழில் அதிபர் மகனிடம் ரூ. 75 லட்சம் மோசடியாக பறித்த சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வசப்படுத்தி அவர்களுடன் நெருங்கிப் பழகும் மோகம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் பிரதீப்க்கு இருந்துள்ளது. சமூக வலைதளங்களில் சினிமா நடிகைகளின் போட்டோக்களை பார்த்து அழகில் மயங்கிய பிரதீப், லொகாண்டா எனும் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதை வைத்து அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பிரதீப்பை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். காஜல் அகர்வாலுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பதிவு கட்டணமாக ரூ.50 ஆயிரம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.


தொடர்ந்து தொழிலதிபர் மகனின் சபலம், பொருளாதார பின்னணியை மோப்பம் பிடித்த சமூக வலை தள பணம் பறிப்பு கும்பல், பிரதீப்பை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்தது. காஜல் அகர்வால் படப்பிடிப்பில் உள்ளார், இன்னும் ஓரிரு நாளில் உங்களை தொடர்பு கொள்வார் என ஆசையை தூண்டியுள்ளனர். மோகத்தின் உச்சம் சென்ற தொழிலதிபர் மகனிடமிருந்து சிறுக, சிறுக ரூ.75 லட்சத்தை கறந்துள்ளனர்.

இந்தப் பணத்தை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு பின், தான் ஏமாற்றப்படுவதை அறிந்த தொழிலதிபர் மகன் பிரதீப், வாழ பிடிக்காமலும், அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனிடையே தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கொல்கத்தா சென்று பிரதீப்பை மீட்டனர். வங்கிக்கணக்கை வைத்து மணிகண்டனை பிடித்து விசாரித்த போது,

Loading...

சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணகுமார் தான் இந்த மோசடியை செய்தது என தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ரூ.3 லட்சம் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்தனர்.

பார்க்க: லோ பட்ஜட் தல, தளபதி..! வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்

வீடியோ பார்க்க: வேல்...வேல்... வடிவேல்!

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...