Home /News /entertainment /

மிஷன் இம்பாஸிபிள் 7,8 பாகங்களின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிஷன் இம்பாஸிபிள் 7,8 பாகங்களின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மிஷன் இம்பாஸிபிள்

மிஷன் இம்பாஸிபிள்

மிஷன் இம்பாஸிபிள் 7, 8 வது பாகங்கள் தள்ளிப் போனதில் டாம் க்ரூஸ் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

கொரோனா பெருந்தொற்று உலக அளவில் திரைப்பட வெளியீட்டில் பெரும் பாதிப்பை செலுத்தி வருகிறது. டாம் க்ரூஸின் வெற்றிகரமான சீரிஸான மிஷன் இம்பாஸிபிளின் 7 மற்றும் 8 ஆம் பாகங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸ் கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல. இதிலும் அவர் ரகசிய உளவாளிதான். அவருக்கென ஒரு டீம் உண்டு. நாசக்காரர்களை ஊடுருவி அழிப்பது இவரது வேலை. அனைத்துப் படங்களிலும் அடுத்தவர் போல் மாஸ்க் அணிந்து நடத்தும் ஆள் மாறாட்டம் நிச்சயம் இருக்கும். அதேபோல் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் டாம் க்ரூஸ் நுழையும் அதிசாகச காட்சியும் தவறாது இடம்பெறும்.

இதையும் படிங்க.. ஓ சொல்றியா பாட்டுக்கு தாமரை, ஐக்கி பெர்ரி டான்ஸ்.. வேற லெவல்!

மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஏழாவது பாகத்தை 2020 ஜுலையில் வெளியிடுவதாக அறிவித்து பிறகு டிசம்பருக்கு மாற்றியது பாராமவுண்ட் நிறுவனம். பிறகு நவம்பர் 2021 க்கு மாற்றினர். இறுதியாக மே 2022 க்கு ரிலீஸை தள்ளி வைத்தனர். பிறகு செப்டம்பர் 30 வெளியாகும் என்றனர். இப்போது பட வெளியீட்டை 2023 ஜுலை 14 க்கு ஒரேயடியாக தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் பாருங்க.. காஜல் அகர்வால் கர்ப்பகால புகைப்படங்கள்

இதேபோல் 8 வது பாகத்தை 2023, ஜுலை 7 வெளியிடுவதாக அறிவித்திருந்தவர்கள் இப்போது மேலும் ஒருவருடம் தள்ளி 2024, ஜுன் 28 வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த இரு பாகங்களையும் மிஷன் இம்பாஸிபிள் - ஃபால்அவுட் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவாரே இயக்குகிறார்.மிஷன் இம்பாஸிபிள் 7, 8 வது பாகங்கள் தள்ளிப் போனதில் டாம் க்ரூஸ் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Hollywood, Movies, Theatre

அடுத்த செய்தி