Annaatthe: அண்ணாத்தே ரிலீஸ் தேதி அறிவிப்பில் விடுபட்ட டி.இமான் பெயர்

அண்ணாத்த - டி.இமான்

அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் அவரது பெயர் விடுபட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

  • Share this:
    நேற்று மாலை அண்ணாத்த படத்தின் வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்க, இசையமைப்பாளர் டி.இமானின் பெயர் மட்டும் விடுபட்டிருந்தது.

    கொரானா நோய்த்தொற்று அனைத்து தொழில்களையும் போல திரைப்பட வர்த்தகத்தையும் முடக்கியுள்ளது. படங்கள் எப்போது வரும், திரையரங்கில் வெளியாகுமா இல்லை ஓடிடியில் வெளியாகுமா என்பதே பரமபத விளையாட்டு போல் ஆகவிட்டது. ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும்விதமாக நேற்று மாலை சன் பிக்சர்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் முதுகு காட்டியபடி இருக்கும் ரஜினியின் புகைப்படத்துடன், 4-11-2021 அண்ணாத்த வெளியாகும் என ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டரில் சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன், ரஜினி, இயக்குனர் சிவா ஆகியோரது பெயர்களுடன் ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குனர், நடன இயக்குனர் உள்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இயக்குனருக்கு அடுத்து குறிப்பிடப்படும் இசையமைப்பாளர் பெயர் மட்டும் விடுபட்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ள நிலையில் அவரது பெயர் விடுபட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போஸ்டரா இல்லை ரசிகர்கள் யாரேனும் வெளியிட்டதா என சந்தேகம் கிளப்பினர். டி.இமானும் அண்ணாத்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என ரசிகர்கள் பலரும் இமானை பாராட்டினர். அதேநேரம், சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் டி.இமானின் ட்விட்டர் அக்கவுண்டையும் சேர்த்து டேக் செய்திருந்தது.

    டி.இமானின் பெயர் போஸ்டரில் இடம்பெறாதது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுவரை விளக்கம் ஏதும் கூறவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: