ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடந்த பிக்பாஸில் கொஞ்சத்தில் மிஸ்.! இந்தமுறை தட்டித் தூக்குவாறா அஸிம்?

கடந்த பிக்பாஸில் கொஞ்சத்தில் மிஸ்.! இந்தமுறை தட்டித் தூக்குவாறா அஸிம்?

ஷிவானியுடன் அஸிம்

ஷிவானியுடன் அஸிம்

பிக்பாஸ் வீட்டிற்குள் அசீமுக்கும் – ஷிவானிக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2 சீசன்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் சின்னத்திரை நடிகர் அஸிம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் அவர் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் போட்டியில் அவர் கலக்குவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  சின்னத்திரையில் பகல் நிலவு, பூவே உனக்காக, நிறம் மாறாத பூக்கள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட மெகா சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் அஸிம். குறிப்பாக இவரும் ஷிவானியும் இணைந்து நடித்த பகல் நிலவு என்ற தொடர், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

  இந்த தொடரின் மூலம் நல்ல ஃபேமஸ் ஆனதால், அஸிம் பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் கொரோனா தொற்று அதிகம் காணப்பட்டதால், அசிம் குவாரன்டைனுக்கு சென்றார்.

  சிம்பு பட நாயகியுடன் ஜோடி சேரும் ஆர்யா! தொடங்கியது புதிய படம்!

  இதன் மூலம் அவர் பிக்பாஸில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் அவர் இடம்பெறாமல் போய்விட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அசீமுக்கும் – ஷிவானிக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது.

  இதன்பின்னர் பிக் பாஸ் சீசன் 5 போட்டியிலும் அஸிம் பங்கேற்பார் என்று தகவல் பரவியது. ஆனால் அந்த நேரத்தில் பூவேஉனக்காக மெகா தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால், அவர் பிக்பாஸில் பங்கேற்கவில்லை.

  இந்நிலையில் பிக் பாஸ் 6 ஆவது சீசனில் அஸிம் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 முறை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்காத நிலையில் இந்த சீசனில் அஸிம் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

  'தொடங்கவே இல்லை.. அதற்குள் வைரல்'.. பிக்பாஸ் எண்ட்ரியா ஜனனி? இன்ஸ்டாவை மொய்க்கும் ரசிகர்கள்!

  அஸிம் நடித்து வந்த பூவேஉனக்காக மெகாதொடர் சமீபத்தில் நிறைவுற்றது. புதிதாக அவர் எந்த மெகா தொடரிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. இதன் மூலம் அவர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் இல் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6