Home /News /entertainment /

Harnaaz Sandhu : மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சாந்து வைரல் டான்ஸ் வீடியோ..

Harnaaz Sandhu : மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சாந்து வைரல் டான்ஸ் வீடியோ..

ஹர்னாஸ் சாந்து

ஹர்னாஸ் சாந்து

Miss Universe Harnaaz Sandhu : ஹர்னாஸ் சாந்துவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டிசம்பர் 13 ஆம் தேதி நடைப்பெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துக்கொண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ஹர்னாஸ் சந்து.

    யாரிந்த ஹர்னாஸ் சந்து ? சண்டிகரை சேர்ந்து ஹர்னாஸ் சாந்து சண்டிகரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஏற்கனவே ஹர்னாஸ் பல போட்டிகளில் கலந்துக்கொண்டு அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

    ஈஸ்ரேலில் நடைப்பெற்ற 70வது மிஸ் யுனிவர்ஸ் 2021-ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு வென்றுள்ளார்.

    இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு சுஸ்மிதா சென் தனது 18வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றை சுஷ்மிதா சென் படைத்தார்.அதன் பின்பு 2000 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் , லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.


    ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றது பற்றி லாரா தத்தா இன்ஸ்டாகிராம் வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.அதில் ‘ நேற்று நான் உங்களிடம் பேசியபோது, 'அது மதிப்புக்குரியதாக இருக்கும்' என்று நீங்கள் எனக்கு உறுதியளித்தீர்கள்.உங்கள் வெற்றிகரமான மகிமைக்கு நீங்கள் மதிப்புள்ளவர், மேலும் அதிகம்!! நீங்கள் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தீர்கள், தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் இதற்காகவே பிறந்தீர்கள்!! நான் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற வருடத்தில் நீ பிறந்தாய்!! இந்தியாவுக்காக மீண்டும் ஒருமுறை அந்த கிரீடத்தை உயர்த்தி வருவதற்காக நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருந்தோம்’ என்று பதிவிட்டிருந்தார்.


    இந்நிலையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து தனது சொந்த ஊருக்கு மேள தாளத்துடன் ஆடி மகிழ்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது. இதில் பிங்க் நிற உடையில் தலையில் கிரீடம் வைத்துள்ள ஹர்னாஸ் சாந்து மிகவும் உற்சாகமாக நடனமாடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Miss Universe

    அடுத்த செய்தி