ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Harnaaz Sandhu: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அரங்கை அதிர வைத்த ஹர்னாஸ் பதில்!

Harnaaz Sandhu: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அரங்கை அதிர வைத்த ஹர்னாஸ் பதில்!

ஹர்னாஸ் சாந்து

ஹர்னாஸ் சாந்து

கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

21 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து, முன்னதாக கேள்வி பதில் சுற்றை எதிர் கொண்ட விதம் இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன் பிறகு இஸ்ரேலின் ஈலாட்டில் நடைபெற்ற 70-வது மிஸ் யுனிவர்ஸ் 2021-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து கிரீடத்தை சூட்டியிருக்கிறார்.

அவர் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி கிரீடத்தை வென்றுள்ளார். உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் நிகழ்வில், மெக்சிகோவைச் சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் 2020 ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸுக்கு கிரீடத்தை சூட்டினார்.

இந்நிலையில், "இன்றைய காலத்தில் இளம் பெண்கள் தினம் எதிர்கொள்ளும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்பதற்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்னாஸ், “இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம், தம்மை தாமே நம்புவது தான். நீங்கள் தனித்துவமானவர் என்பதை அறிந்துக் கொள்வது தான் உங்களை அழகாக்குகிறது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள், அதற்கு பதில் உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசலாம். வெளியே வாருங்கள், உங்களுக்காக பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் தலைவர். நீங்களே உங்கள் சொந்த குரல். நான் என்னை நம்பினேன் அதனால் தான் இன்று இங்கு நிற்கிறேன்" என்றதும் அரங்கத்தில் கை தட்டல்கள் வானை பிளந்தன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Miss Universe