பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கிறேனா? நடிகை மிருணாளினி ரவி பதில்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கிறேனா? நடிகை மிருணாளினி ரவி பதில்

நடிகை மிருணாளினி ரவி

பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை மிருணாளினி ரவி விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வதாக நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அது நிகழ்ச்சிக்கான புரமோஷனாக மாறி விடுகிறது.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில் 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ள கடந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரியல் நடிகர் அசீம் உள்ளிட்ட ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டப்ஸ்மாஷ் மூலம் புகழ் பெற்று திரைத்துறைக்கு வந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவியும் இந்த முறை பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து தனியார் இணையதளத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “என்னை முதல் சீசனில் இருந்தே அழைத்து வருகிறார்கள். ஆனால் நான் போகமாட்டேன். பிக்பாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ச்சியாக நான் அதை பார்ப்பேன். ஒரு பார்வையாளராக அந்த நிகழ்ச்சியின் மீது எனக்கு எந்தவித விமர்சனமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: