• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடியில் வெளியாகிறது மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்!

ஓடிடியில் வெளியாகிறது மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்!

மின்னல் முரளி

மின்னல் முரளி

மின்னல் முரளி போன்று மேலும் பல பெரிய பட்ஜெட் மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் குறையத் தொடங்கிய போது கேரளாவிலும் குறைந்து, பிறகு திடீரென அதிகரித்து, தினசரி தொற்று இருபதாயிரத்தை கடந்தது. அதனால், டிசம்பர்வரை கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



இதன் காரணமாக ஆகஸ்ட் 12 வெளியாவதாக இருந்த மோகன்லாலின் மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்கு திறக்க ஒரு வருடமானால், ஒரு வருடம் கழித்து மரக்கார் வரும் என படத்தின் இயக்குனர் ப்ரியதர்ஷன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உறுதி அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. கடன் வாங்கி படம் எடுத்தவர்களால் நாள்களை தள்ளிப்போட முடியாது

Also read... ஆர்யா, அருண் விஜய், அதர்வா, கதிர் நடிப்பில் தயாராகும் வெப் தொடர்கள்!



மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி, திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தப் படத்தை பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெயிலர் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்குக்கு என எடுத்த இப்படம் ஓடிடியில் வெளியாவது வருத்தத்துக்குரியதே. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மின்னல் முரளி போன்று மேலும் பல பெரிய பட்ஜெட் மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: