• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மின்னல் முரளி - தேதி அறிவிப்பு

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மின்னல் முரளி - தேதி அறிவிப்பு

மின்னல் முரளி

மின்னல் முரளி

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் படத்தை வாங்கியுள்ளது.

  • Share this:
    ஒப்பீட்டளவில் இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களைவிட அதிக எண்ணிக்கையில் மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் கட்டுக்குள் வராததால், டிசம்பருக்கு முன் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்று அங்குள்ள அமைச்சரே அறிவித்துள்ளார்.

    இது ஒரு காரணம் என்றால், மலையாளப் படங்கள் திரையரங்கில் வெளியானால், அம்மாநிலத்தில் மட்டுமே பார்க்கப்படும். ஓடிடியில் சப் டைட்டிலுடன் வெளியாகும் போது உலகம் முழுவதும் சென்று சேரும். இந்த இரண்டு காரணங்களால் பெரிய பட்ஜெட் படங்களையும் ஓடிடியில் தயக்கமின்றி வெளியிடுகின்றனர்.

    மாலிக் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் வரிசையில் அடுத்து ஓடிடியில் வெளியாகப் போகும் மலையாளப் படம் மின்னல் முரளி. மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இது. மின்னல் முரளியாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். அவரது பிற படங்களுடன் ஒப்பிடுகையில் மின்னல் முரளி அதிகப் பொருட்செலவில் தயாரான படம். பாசில் ஜோசப் படத்தை இயக்கியுள்ளார்.

    இவரது இயக்கத்தில் இதற்கு முன் வெளியான படங்கள் அதன் நையாண்டித்தன்மைக்காக பாராட்டப்பட்டவை. பேண்டஸியும், யதார்த்தமும் இணைந்த கதைக்களத்தை உருவாக்குவதில் வல்லவர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் படத்தை வாங்கியுள்ளது. இந்த மாதம் 24-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    Minnal Murali, Malayalam first superhero film,  minnal murali Tovino Thomas, minnal murali netflix, minnal murali release platform, minnal murali full movie release date, minnal murali actress, minnal murali amazon prime, minnal murali release date 2020, minnal murali release ott, minnal murali watch online, மின்னல் முரளி, மின்னல் முரளி திரைப்படம், மின்னல் முரளி மலையாளம், மின்னல் முரளி டோவினோ தாமஸ்
    மின்னல் முரளி


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வருடம் த்ரிஷ்யம் 2 படத்தில் தொடங்கிய மலையாளப் படங்களின் ஓடிடி ஆதிக்கம் ஜோஜி, மாலிக், குருதி, ஹோம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. மின்னல் முரளியும் இந்தப் படங்களின் வரிசையில் இடம்பிடிக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: