• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Minnal Murali: மின்னல் முரளி - மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ படம்!

Minnal Murali: மின்னல் முரளி - மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ படம்!

மின்னல் முரளி

மின்னல் முரளி

டொவினோ தோமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • Share this:
    மலையாளத்தில் மின்னல் முரளி என்ற படம் தயாராகியுள்ளது. டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.

    சூப்பர் ஹீரோ திரைப்படங்களை எடுக்க முதலாவது தேவை பணம். கரன்சியில் போதாது, டாலர்களில் வேண்டும். அதுவும் பல மில்லியன்களில். அதனாலேயே இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை. இரண்டாவது, வெளிநாடுகளில் குழந்தைப் பருவத்திலேயே காமிக்ஸில் சூப்பர் ஹீரோ கதைகளைப் படித்து வளர்கிறார்கள். அங்கு அந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் இந்தியாவில் இல்லை, அல்லது குறைவு.

    இந்த தடைகளை கடந்து இந்தியில் க்ரிஷ் சூப்பர் ஹீரோ திரைப்படம் மூன்று பாகங்கள் வந்தது. நான்காவதை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். தமிழில் மிஷ்கின் எடுத்த மூகமூடி கால்கிணறு தாண்டிய அனுபவத்தையே தந்தது. சூப்பர் ஹீரோ படங்களை குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது, டைட்டானிக் கதையை கட்டு மரத்தில் எடுப்பது போல. நலன் குமாரசாமி ஆர்யாவை வைத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றை எடுப்பதாக இருந்தார். ஆனால், இன்னும் அது தொடங்கப்படாமலே உள்ளது. மலையாளத்தில் மின்னல் முரளியை முந்திக் கொண்டு எடுத்திருக்கிறார்கள்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Minnal Murali, Malayalam first superhero film, minnal murali Tovino Thomas, minnal murali netflix, minnal murali release platform, minnal murali full movie release date, minnal murali actress, minnal murali amazon prime, minnal murali release date 2020, minnal murali release ott, minnal murali watch online, மின்னல் முரளி, மின்னல் முரளி திரைப்படம், மின்னல் முரளி மலையாளம், மின்னல் முரளி டோவினோ தாமஸ்
    மின்னல் முரளி


    2015-ல் தனது 25 வயதில் குஞ்ஞிராமாயணம் மலையாளப் படத்தை இயக்கிய பாசில் ஜோசப், மின்னல் முரளியை இயக்கியுள்ளார். இவரது 3-வது படம் இது. டொவினோ தோமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல இடர்களை கடந்து இந்தப் படம் தயாராகியுள்ளது.

    2020-ல் இந்தப் படத்துக்காக ஒரு கோவில் செட்டை அமைத்தனர். அது சினிமாவுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டது. 50 லட்சம் செலவில் தயாரான அந்த கோவில் செட்டை ஆந்தராஷ்டிரா இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள்ளைச் சேர்ந்தவர்கள் இடித்துத் தள்ளினர். தயாரிப்பாளருக்கு 50 லட்சம் வீணானது. புதிய அரங்கு அமைத்தது, அதற்காக படப்பிடிப்பு தள்ளிப்போனது என மேலும் பல லட்சங்கள் இழப்பு. இப்போது படம் சிறப்பாக வந்ததில் அனைவருக்கும் திருப்தி.

    பாசில் ஜோசப்பின் முந்தைய இரு படங்கள் நையாண்டியில் சிறந்தவை. இதுவும் அதேபாணியில் இருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. மின்னல் முரளி சூப்பர் ஹீரோ படங்களின் இன்னொரு பரிமாணத்தை நமக்குத்தரும் என உறுதியாக நம்பலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: