முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாமன்னன் தான் கடைசி படம்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

மாமன்னன் தான் கடைசி படம்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi stalin | கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai

இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர், சினிமா தயாரிப்பாளர், நடிகர், விநியோகிஸ்தர் என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தைத் தயாரித்து நடித்து வரும் அவர், இந்தப் படம் தான் கடைசிப் படம் என்று கூறி வந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. சமீபத்தில் 'கலகத் தலைவன்' படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டிகளில் கூட 'மாமனிதன்' தான் தனது கடைசிப் படம் என முடிவு செய்வதாகவும், கமல் தன்னை தொடர்ந்து நடிக்குமாறு அறிவுறுத்தியதன் காரணமாகவே அவர் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..' அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். தற்போது நடித்துவரும் மாமன்னன் தான் கடைசி திரைப்படம் என்றும், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' பட இயக்குநர் மு.மாறன் இயக்கி வரும் 'கண்ணை நம்பாதே' படமும் தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ministers, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin