ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வாடகை தாய் விவகாரம்.. அதிகாரிகளே முடிவு செய்வார்கள்' - நயன் விக்கி ஜோடி குறித்து அமைச்சர் விளக்கம்

'வாடகை தாய் விவகாரம்.. அதிகாரிகளே முடிவு செய்வார்கள்' - நயன் விக்கி ஜோடி குறித்து அமைச்சர் விளக்கம்

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

கருமுட்டை, வாடகை தாய் விவகாரம் குறித்து சட்டங்கள், விதிகள் பற்றி நான் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் வாடகை தாய் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க வேண்டுமா இல்லையா என சுகாதாரத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Also read... திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதை!? சேலத்து பையனாகும் சிவகார்த்திகேயன்.. பரவும் தகவல்!

    மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கருமுட்டை, வாடகை தாய் விவகாரம் குறித்து சட்டங்கள், விதிகள் பற்றி நான் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோன். நயன்தாரா விக்னேஷ் சிவன் இடம் கேட்க வேண்டுமா இல்லையா என அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Director vignesh shivan, Ma subramanian, Nayanthara