ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை.. ஒரு வாரத்தில் அறிக்கை" வாடகைத் தாய் விவகாரம் குறித்து அமைச்சர் தகவல்

"விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை.. ஒரு வாரத்தில் அறிக்கை" வாடகைத் தாய் விவகாரம் குறித்து அமைச்சர் தகவல்

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு தகவல் தெரிவித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாடகைத் தாய் விவகாரம் குறித்து  விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. இது குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

Also read... 32 வருடங்களுக்குப் பிறகு கைகோக்கும் ரஜினி - மணிரத்னம்.. மீண்டும் தளபதி கூட்டணி? விரைவில் அசத்தல் அப்டேட்!

மேலும், நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு தகவல் தெரிவித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், வாட்கை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, விக்னேஷ் சிவன்-நயன் தாராவிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை கோப்புகள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளனவா என முழுவதும் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director vignesh shivan, Ma subramanian, Nayanthara