திரையரங்குகள் திறப்பது எப்போது? - அமைச்சர் பதில்!

திரையரங்கு

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரையரங்குகளை திறக்க  அனுமதிக்கவேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்த நிலையில், முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் திரையரங்கு தொழிலும் ஒன்று. கொரோனா முதல் அலையில் மூடப்பட்ட திரையரங்குகள் கொரோனா தொற்று தணிந்த நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டன. மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துரதிஷ்டவசமாக இரண்டாவத அலை தீவிரமாக, மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. பல தொழில்கள் இயங்க அனுமதி அளித்த பின்னும் திரையரங்குகள் திறக்க மட்டும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. முக்கிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Also read... தாயாக நடிப்பதில் தயக்கமில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வழிகாட்டுதல்படி கடைபிடிப்பதாகவும் உறுதி அளித்தனர். தற்போது அவர்களுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மருத்துவக்குழு வல்லநர்களுடன் ஆலோசித்து திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். அடுத்த வாரம் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: