’ருத்ர தாண்டவம்’ படப்பிடிப்பில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்

படப்பிடிப்பு தளத்தில் மோகன் ஜி.

அமைச்சரும், அதிமுக ராயபுரம் தொகுதி வேட்பாளருமான ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்.

 • Share this:
  அமைச்சரும், அதிமுக ராயபுரம் தொகுதி வேட்பாளருமான ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்.

  கடந்தாண்டு வெளியாகிய ‘திரெளபதி’ திரைப்படம் இணையத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கியவர். திரெளபதி படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்தார்.

  Cook With Comali: ’குக் வித் கோமாளி’யில் வைல்ட் கார்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரபலம்?

  இதனையடுத்து தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மோகன் ஜி. இந்தப் படத்திலும் ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது.

  இதற்கிடையே ராயபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ருத்ர தாண்டவம்’ படப்பிடிப்பு தளத்தை விசிட் செய்தார். அங்கு மோகன் ஜி-யை சந்தித்த அவர், வாக்கு சேகரித்து விட்டு, அவரை வாழ்த்தி விட்டுச் சென்றிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: