• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Safe - விறுவிறுப்பான ரோலர் கோஸ்டர் அனுபவம்...!

Safe - விறுவிறுப்பான ரோலர் கோஸ்டர் அனுபவம்...!

சேஃப்

சேஃப்

நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் விசாரணை ஜாடிக்குள் அடைபட்டு பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட பூதத்தை தட்டியெழுப்பும் கதைகள் புதிதல்ல.

  • News18
  • Last Updated :
  • Share this:
சேஃப் 2018 இல் வெளியான எட்டு எபிஸோடுகளை கொண்ட மினி சீரிஸ். த்ரில்லர் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டது. பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஹார்லன் கோபென் எழுதியது.

சேஃப் ஒரு கேட்டட் கம்யூனிட்டி. விசாலமான இடம், ஓங்கி வளர்ந்த மரங்கள், நிசப்தம் சூழ்ந்த சுற்றுப்புறம். அதில் மருத்துவர் டாம் டெலானி தனது இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகள் 16 வயதான ஜென்னி பார்ட்டிக்கு சென்றவள் வீடு திரும்பவில்லை. அவளது பாய்ப்ரெண்டையும் காணவில்லை. டாம் டெலானி தனது மகளை தேட ஆரம்பிக்கிறார்.சமீபத்தில்தான் டாமின் மனைவி புற்றுநோயால் இறந்திருந்தாள். அதன் காரணமாக கடும் மனஅழுத்தத்தில் ஜென்னி இருந்தது டாமுக்கு தெரியும். ஒருவகையில் அவரே அதற்கு காரணம். மனைவியின் கடைசி நிமிடங்களில் ஜென்னி பலமுறை போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை. அவர் வந்த போது அவரது மனைவி ஏற்கனவே உயிர் துறந்திருந்தாள்.ஒருபக்கம் போலீசும், இன்னொரு பக்கம் டாமும் ஜென்னியை தேடுகிறார்கள். இந்த நேரம் ஜென்னியின் பாய்ப்ரெண்டின் உடல் கிடைக்கிறது. யார் அவனை கொன்றது? ஜென்னியின் நிலை என்ன? அவள் காணாமல் போனதற்கு முன் யார் யாரை சந்தித்தான், யாரை தொடர்பு கொண்டாள் என்ற விசாரணை அடுத்தடுத்த மர்மங்களுக்கு கொண்டு செல்கிறது. பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்து, இந்த விசாரணையின் வழியாக மீண்டும் உயிர்பெறுகிறதுAlso read... இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு பார்வை!

நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் விசாரணை ஜாடிக்குள் அடைபட்டு பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட பூதத்தை தட்டியெழுப்பும் கதைகள் புதிதல்ல. இன்னும் சொன்னால் அவை ஏராளம் உள்ளன. சேஃப் அந்தவகைமையில் எடுக்கப்பட்டது. கதையை சொன்ன விதமும், காட்சிக்கு காட்சி அதிகரிக்கும் விறுவிறுப்பும் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை தருவது சேஃபின் சிறப்பம்சம். இன்னொன்று டாமாக நடித்திருக்கும்  மைக்கேல் சி. ஹால். டெக்ஸ்டர் தொடரின் நாயகன். அதில் இவர் நல்லவரான சீரியல் கில்லர். அந்த இறுக்கமான நடிப்பு இதிலும் உண்டு. தொடரோடு ஒன்ற அவரும் ஒரு காரணம்

க்ரைம் த்ரில்லர் விரும்பிகளை இந்தத் தொடர் நிறைவுப்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: