நகரப் பேருந்துகளிலோ அல்லது மினி பேருந்துகளிலோ பயணம் செய்கையில் அந்த பயணத்திற்கென்றே எழுதப்பட்டது போன்ற பல பாடல்களை கேட்டிருப்போம். அம்மாதிரியான பாடல்களை பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
ஊரின் நகர பேருந்துகளிலோ அல்லது மினி பஸ்களிலோ பயணம் செய்யும்போது சில பாடல்கள் மட்டும் திரும்ப திரும்ப ஒலிப்பதை கேட்டிருப்போம். பொதுவாக 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாகவே அப்பாடல்கள் இருக்கும். அவற்றில் ஒரு பாடல் தான் ‘செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே... செவ்வந்தி பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு’ பாடல். ’செவ்வந்தி’ என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், சுனந்தா பாடிய இந்த செவ்வந்தி பாடல் ஒலிக்காத மினி பஸ்கள் இல்லை என்று சொல்லலாம்.
இந்த வரிசையில் இணைந்த மற்றுமொரு பாடல் திருமூர்த்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி' பாடல். தேவா இசையில் ஜானகி, SBP பாடிய இந்த பாடலை கேட்டு இறங்கும் இடம் கூட மறந்து வெகுதூரம் சென்ற பயணிகளையும் சந்தித்தது அந்த மினி பஸ்கள். குறிப்பாக ’கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே' மற்றும் 'சொக்கனுக்கு பக்கத்திலே சோடி என்று வந்தவளே' என்ற பாடல் வரிகள் கோயம்புத்தூர் பயணிகளையும் கூட மதுரைக்கே அழைத்து சென்றிருக்கும்.
உலகின் சிறந்தப் படங்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி!
பயணம் முழுவதும், யாரும் யாருடனும் வெட்டியாக முறைத்துக் கொள்ளாமல், கன்டெக்டர் சில்லறைக்காக சலித்துக் கொள்ளாமல், போனில் வெட்டிப்பேச்சு பேசுவதை கூட சற்று ஒத்திவைக்கக் கூடிய அளவிற்கு மினி பஸ்ஸில் ரிப்பீட்ட் மோடில் ஒலித்த பாடலென்றால் ‘பார்வை ஒன்றே போதுமே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா’ என்ற பாடலை சொல்லலாம். சிற்பி இசையில் உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜானகி பாடிய இப்பாடலில் கரைந்து உருகிப் போயினர் அப்பேருந்தின் தூர இருக்கைகளில் அமர்ந்து பார்வையை பரிமாறிக் கொண்ட காதலர்கள்.
பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குலுங்கி, குலுங்கி பயணம் செய்யும் மினி பஸ்கள் உடலில் சிறு வலியை தந்தாலும் கூடவே நிவாரணியாக ஒத்தடம் தந்தது ”குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளம் மானே’, ’மலரே மெளனமா', ’ ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயலயே’, ’வெண்ணிலவுக்கு இந்த வானத்தை புடிக்கலையா', ’அழகான மஞ்ச புறா’, ’ஆணென்ன பெண்ணென்ன', ’ஊரு சனம் தூங்கிடுச்சு', ’செண்பகமே செண்பகமே', ‘பூவே இளைய பூவே’ போன்ற இனிமையான பாடல்களே!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.