81 வயதிலும் தண்டால் எடுத்து அசத்தும் பிரபல நடிகரின் அம்மா

81 வயதுடைய தனது தாயார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரபல நடிகர் தனது சமூகவலைதள பகக்த்தில் பகிர்ந்துள்ளார்.

81 வயதிலும் தண்டால் எடுத்து அசத்தும் பிரபல நடிகரின் அம்மா
மிலிந்த் சோமனின் தாயார்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதலே திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைபிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நட்சத்திரங்கள் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ஊரடங்கு காலத்தில் வீட்டு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி வீடியோக்களையும் நடிகர், நடிகைகளின் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் காண முடிகிறது.

இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன் தனது தாயார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, அவரது 81-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ''ஜூலை 3, 2020-ல் தனது 81வது பிறந்த நாளை எனது அம்மா கொண்டாடுகிறார். 15 தண்டாலுடன் பார்ட்டி, பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா'' என்று கூறியுள்ளார்.


தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் மிலிந்த் சோமன், இந்தி தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மாடலிங் துறையிலும் மிலிந்த் ஈடுபட்டு வருகிறார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading