• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோவா கடற்கரையில் நிர்வாண ஓட்டம்: பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் மீது வழக்குப் பதிவு

கோவா கடற்கரையில் நிர்வாண ஓட்டம்: பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் மீது வழக்குப் பதிவு

நடிகர் மிலிந்த் சோமன்

நடிகர் மிலிந்த் சோமன்

கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடியதற்காக நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

  • Share this:
    ஹிந்தி திரையுலகில் சர்ச்சைக்குப் பெயர்போன மாடலும் நடிகையுமான பூனம் பாண்டேவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவா காவல்துறையினர் கைது செய்தனர். கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் பூனம் பாண்டே ஆபாச புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் புகைப்படம் எடுப்பதைத் தடுக்காத காவல் ஆய்வாளரும் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருக்கும் மிலிந்த் சோமன், அவரது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய புகைப்படத்தை நவம்பர் 4-ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனையடுத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்காக பூனம் பாண்டே மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மிலிந்த் சோமன் மட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவந்தனர்.

    இந்தநிலையில், இந்தப் புகைப்படம் குறித்து கோவா சுரக்‌ஷ் மன்ச் என்கிற அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. அந்தப் புகாரில், மிலிந்த் சோமன் இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளதாகவும், ஆபாசமான இந்தப் புகைப்படத்தால் கோவாவின் கலாச்சாரத்தை களங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், மிலிந்த் சோமன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294, மற்றும் 67 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: