பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் முதல்முறையாக இந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். தனது காட்சிகளுக்கான டப்பிங்கையும் அவர் பேசி முடித்துள்ளார்.
மைக் டைசன் முன்னாள் குத்துச்சண்டை ஹெவி வெயிட் சாம்பியன். அவருடைய அதிரடியான குத்துகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் எதிரிகள் நாக் அவுட்டாவது அவரது சிறப்பம்சம். எதிராளியை நாக் அவுட் செய்ய முடியாமல் அவரது காதை மைக் டைசன் கடித்த சம்பவத்தில் எதிர்மறையாக உலக அளவில் மைக் டைசனின் பெயர் பிரபலமானது.

மைக் டைசன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்திய திரைப்படம் ஒன்றில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் லைகர் திரைப்படத்தில் மைக் டைசன் முக்கிய வேடமேற்றிருந்தார். இதுதான் அவர் நடிக்கும் முதல் இந்திய திரைப்படம் ஆகும். லைகர் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். இதில் குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதன் கிளைமாக்ஸ் காட்சியை அமெரிக்காவில் படமாக்கினார்.
இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படம்!
விஜய் தேவரகொண்டா மைக் டைசனுடன் மோதுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. லைகர் திரைப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை மைக் டைசன் பேசி முடித்துள்ளார். அத்துடன், தன்னிடம் தன்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி என்றும், மிக உன்னதமாக இந்த அனுபவத்தை உணர்வதாகவும் வீடியோ ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
BEAST trailer : வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் தளபதி ரசிகர்கள்!
லைகர் திரைப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர்ர் நடித்துள்ளனர். புரி ஜெகன்நாத் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து லைகரை தயாரித்துள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக லைகர் வெளியாகிறது. வரும் ஆகஸ்ட் 25 படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.