முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை என்று மியா தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவராக அறியப்படுபவர் மியா கலிஃபா. இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2019 மார்ச் மாதம் அறிவித்திருந்தார். தொடர்ந்து, பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார்.

எனினும், கொரோனா பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தது. இதனால், அவர்கள் இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர்.

Also read: சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

சுமுகமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் உறவில் அவ்வப்போது விரிசல் வந்து செல்வது வழக்கம். எனினும், அதனை சிறிது நேரத்தில் அவர்களை சரி செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் மியா கலிஃபா கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

Also read: எனது கணவர் அப்பாவி; பாலியல் ஆசையைத் தூண்டும் படங்களே எடுத்தார்: ஷில்பா ஷெட்டி

நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

திருமண உறவில் இருந்து பிரிவதால் எந்த வருத்தமும் இல்லை. இதனால், எங்களது வாழ்க்கையை வெவ்வேறு பாதையில் மீண்டும் புதிதாக தொடங்க உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Actress, Divorce, Mia Khalifa