• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சசிகுமார் - பொன்ராம் கூட்டணியின் ‘எம்ஜிஆர் மகன்’ ட்ரெய்லர் ரிலீஸ்

சசிகுமார் - பொன்ராம் கூட்டணியின் ‘எம்ஜிஆர் மகன்’ ட்ரெய்லர் ரிலீஸ்

Youtube Video

‘எம்ஜிஆர் மகன்’  திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராம் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சசிகுமாருக்கு ஜோடியாக டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி நடித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

    இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிராமத்து பின்னணி கொண்ட கதையில் இயக்குநர் பொன்ராம் ஸ்டைலில் கலகலப்பான நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் விரைவில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.



    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குநராக துரைராஜ் பணிபுரிந்துள்ளனர்.



    இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதி தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் சசிகுமார். மேலும் ‘முந்தானை முடிச்சு’ தமிழ் ரீமேக்கில் பாக்யராஜ் கேரக்டரிலும் சசிகுமார் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கே.பாக்யராஜ் இந்தப் படத்துக்கு கதை எழுத ஜே.எஸ்.பி.சதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: