• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்குகளுக்கு குட் பை.... தீபாவளிக்கு ஓடிடி-யில் வெளியாகிறது எம்ஜிஆர் மகன்!

திரையரங்குகளுக்கு குட் பை.... தீபாவளிக்கு ஓடிடி-யில் வெளியாகிறது எம்ஜிஆர் மகன்!

எம்.ஜி.ஆர் மகன்

எம்.ஜி.ஆர் மகன்

சசிகுமார் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.

  • Share this:
    சசிகுமார் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் திரையரங்குகளை தவிர்த்து, நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் பிரச்சனைகள் பலவிதம். திரையரங்குகள் திறக்காததே பிரச்சனைக்கு காரணம் என்பார்கள். திறந்தால், படம் பார்க்க யாரும் வரவில்லை என்பார்கள். ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு இழுக்கும், மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியானால், மற்ற படங்களை திரையிட தியேட்டர்கள் இல்லை என்பார்கள். இவ்வகைப் பிரச்சனைகளின் சர்வரோக நிவாரணியாக அமைந்தள்ளது ஓடிடி தளங்கள்.

    இரண்டாவது கொரோனா அலை பயமுறுத்திக் கொண்டிருந்த மார்ச் - ஏப்ரலில் எம்ஜிஆர் மகன் படத்தை வெளியிட திட்டமிட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். சில வாரங்கள் முன்பு படம் திரையரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. சசிகுமாரின் உடன்பிறப்பே ரசிகர்களிடம் வரவேற்பு பெறாததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    எம்ஜிஆர் மகனை பொன்ராம் இயக்கியுள்ளார். கிராமத்து வாழ்வை அழிக்க வந்த வில்லன் தான் இந்தக் கதையும். இதில் விவசாயத்துக்குப் பதில் மலையை ஆட்டையப்போட வரும் வில்லன். மிருணாளினி ரவி நாயகி. சசிகுமாரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். தந்தைக்கும், மகனுக்கும் ஆகாது. ஏன் என்பது படத்தின் முடிச்சுகளில் ஒன்று. பழ.கருப்பையா, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    தீபாவளிக்கு படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: