MGR Magan: திரையரங்கில் வெளியாகும் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம்!

MGR Magan: திரையரங்கில் வெளியாகும் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம்!

எம்.ஜி.ஆர் மகன்

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் எம்.ஜி.ஆர் மகன் சிலர் கூறியது போல் ஓடிடி-யில் வெளியாகவில்லை. திரையரங்கில் தான் வெளியாக உள்ளது.

  • Last Updated :
  • Share this:
    பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் எம்.ஜி.ஆர் மகன் சிலர் கூறியது போல் ஓடிடி-யில் வெளியாகவில்லை. திரையரங்கில் தான் வெளியாக உள்ளது.

    தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கிய பொன்ராம், தற்போது சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனியை வைத்து இயக்கியிருக்கும் படம், எம்.ஜி.ஆர் மகன். சசிகுமாரும், சத்யராஜும் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இந்தப் படத்தை மார்ச்சில் படத்தை வெளியிட முயன்றனர். பல காரணங்களால் அது முடியாமல் போக, எம்.ஜி.ஆர் மகன் ஓடிடி-யில் தான் வெளியாகப் போகிறது என சிலர் கிளப்பிவிட்டனர். அதற்கு தயாரிப்பு நிறுவனம் தங்களின் விளம்பரம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    எம்.ஜி.ஆர் மகனின் முதல் பாடல் நாளை வெளியாகிறது. அந்த போஸ்டரில் ஏப்ரல் 23-ம் தேதி படம் வெளியாவதாக குறிப்பிட்டுள்ளனர். படம் திரையரங்கில் வெளியாவதை சுட்டிக்காட்டும் விதமாக, 50% ஆடியன்ஸ், 100% என்டர்டெயின்மெண்ட் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    சென்டிமெண்ட், நகைச்சுவை, காதல் என்று பொன்ராமின் 100 சதவீத பொழுதுப்போக்கு ஃபார்முலாவில் இப்படம் தயாராகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    First published: