MGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு

MGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு

எம்.ஜி.ஆர் மகன்

மார்க்கெட் இருக்கிறவர்களுக்கே சினிமாவில் மவுசு. அது சத்யராஜானாலும், சமுத்திரக்கனியானாலும். மார்க்கெட் இல்லை என்றால், போஸ்டரில்கூட முகத்தை போட மாட்டார்கள்.

  • Share this:
    மார்க்கெட் இருக்கிறவர்களுக்கே சினிமாவில் மவுசு. அது சத்யராஜானாலும், சமுத்திரக்கனியானாலும். மார்க்கெட் இல்லை என்றால், போஸ்டரில்கூட முகத்தை போட மாட்டார்கள்.

    இயக்குநர் பொன்ராமின் எம்ஜிஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்கள் அல்லவா? 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதித்தாலும் பரவாயில்லை, திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று வைராக்கியத்துடன் ஏப்ரல் 23 படத்தை திரையரங்கில் வெளியிடுகிறார்கள், படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.

    படத்தில் சசிகுமாரும், சத்யராஜும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். சீனியர் நடிகர் என்பதால் போஸ்டரில் சசிகுமார் & சத்யராஜ் நடிக்கும் எம்.ஜி.ஆர் மகன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை வெளியிட்ட போஸ்டர்களில் ஸ்டாம்ப் சைஸுக்குக்கூட சத்யராஜ் படத்தை போடவில்லை. சசிகுமாரும், சமுத்திரக்கனியும் மட்டும் எதிரெதிரே முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சத்யராஜ் இருந்தால் படத்தின் மார்க்கெட் அதிகரிக்கும் தான். என்றாலும், சசிகுமார் - சமுத்திரக்கனி கூட்டணிக்கு ரசிகர்களிடம் ஓர் எதிர்பார்ப்பு உள்ளது. நாடோடிகளில் உருவான இந்த இமேஜை எம்ஜிஆர் மகனுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் சத்யராஜ் முகம் இதுவரை எந்த போஸ்டரிலும் இல்லை. பதிலுக்கு சமுத்திரக்கனி சசிகுமாருடன் போஸ்டரில் இடம் பிடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: