முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்.ஜி.ஆர், கமல், மணிரத்னம்... பொன்னியின் செல்வன் கதையை படமாக்க நடந்த பல முயற்சிகள்!

எம்.ஜி.ஆர், கமல், மணிரத்னம்... பொன்னியின் செல்வன் கதையை படமாக்க நடந்த பல முயற்சிகள்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கமல், ஸ்ரீதேவியை வைத்து பாரதிராஜா இயக்கத்தில் பொன்னியின் செல்வனை தயாரிக்க நினைத்தார் எம்.ஜி.ஆர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எழுத்தாளர் கல்கி 1950-லிருந்து நான்கு வருடங்கள் கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் கதையை தொடராக எழுதினார். எழுதப்பட்ட போதும், அது ஐந்து தொகுதிகளாக புத்தக வடிவம் பெற்ற போதும் பெருவாரியான வாசகர்களை அது சம்பாதித்தது. நாவலின் கதாபாத்திரங்கள் படித்தவர்கள் மனதில் ஆழப்பதிந்தன. வானவில் போன்று பலவர்ணம் கொண்ட கதாபாத்திரங்களை படமாக்க பலரும் விரும்பியது இயற்கை. எம்ஜிஆருக்கு அப்படியொரு எண்ணம் வந்ததில் வியப்பில்லை.

1958-ல் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் வெளியானது. அந்த காலத்திலேயே பத்து லட்சத்திற்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். எம்ஜிஆரின் முதல் தயாரிப்பு மற்றும் இயக்கம். படம் வெளியாகி வசூலை குவித்தது.

அந்த வெற்றியின் குஷியில் அதைவிட ஒரு சிறந்தப் படத்தை எடுக்கும் பொருட்டு பொன்னியின் செல்வனை படமாக்கும் வேலையில் இறங்கினார். அவரே தயாரிப்பு, அவரே இயக்கம். பொன்னியின் செல்வனின் மையக் கதாபாத்திரம் வந்தியத்தேவன். எனினும் ஒருகட்டத்துக்கு மேல் அருள்மொழிவர்மன் லீட் எடுப்பார். வந்தியத்தேவனை குதிரையிலிருந்து விழ வைத்துதான் அருள்மொழிவர்மனின் அறிமுகமே இருக்கும். வந்தியதேவனாக நடித்தால், அருள்மொழி வர்மனுக்கு கீழ் இருந்தாக வேண்டும். அருள்மொழிவர்மனாக நடித்தால், முதன்மை கதாபாத்திரமான வந்தியதேவனை இழக்க நேரிடும். யோசித்த எம்ஜிஆர் இரண்டு வேடங்களிலும் தானே நடிப்பதென்று முடிவு செய்தார். இத்தனைக்கும் இந்த இரு கதாபாத்திரங்களும் உருவ ஒற்றுமை கொண்டவர்களோ, இரட்டைப் பிறவிகளோ அல்ல.

பொன்னியின் செல்வனுக்காக பத்மினி, சாவித்ரி, வைஜெயந்திமாலா, நம்பியார் என பலரை தேர்வு செய்தார் எம்ஜிஆர். நாடோடி மன்னனுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.ராமுவும், இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவும் பொன்னியின் செல்வனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். விளம்பரம் வெளியானது. இந்நிலையில், சீர்காழியில் வைத்து எம்ஜிஆருக்கு விபத்து ஏற்பட, பொன்னியின் செல்வன் வேலைகள் தடைபட்டன. அவர் உடல்ரீதியாக மீண்டு வந்தபோது ஏற்கனவே கமிட் செய்திருந்த படங்களை முடிக்க வேண்டிய நிர்பந்தம்.

பொன்னியின் செல்வன் படத்துக்காக கமலிடம் ரஜினிக்கு சிபாரிசு செய்த சிவாஜி!

நான்கு வருடங்களுக்குப் பிறகு எம்ஜிஆர் மீண்டும் முயற்சி செய்தார். அதுவும் கைகூடவில்லை. அவர் தனிக்கட்சி தொடங்கி முதல்வரான பிறகும் பொன்னியின் செல்வன் ஆசை அவரைவிட்டு போகவில்லை. கமல், ஸ்ரீதேவியை வைத்து பாரதிராஜா இயக்கத்தில் பொன்னியின் செல்வனை தயாரிக்க நினைத்தார். அது செயல் வடிவம் பெறுவதற்குள் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொண்ணூறுகளில் கமல் பொன்னியின் செல்வனை படமாக்க முயன்றார். பணம் முதன்மை பிரச்சனையாக இருந்தது. பின்னர் பொன்னியின் செல்வனை விட்டு விட்டு மருதநாயகத்தை ஆரம்பித்தார். மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க விரும்பி 2010-ல் வேலைகளை ஆரம்பித்தார். ஜெயமோகன் திரைக்கதை எழுதினார். விஜய், மகேஷ்பாபு ஆகியோரை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், எதிர்பாராத பல தடங்கல்களால் அந்த நேரம் படம் கைவிடப்பட்டு, 12 வருடங்கள் கழித்து மணிரத்னத்துக்கு சாத்தியமாகியிருக்கிறது.

First published:

Tags: Kamal Haasan, MGR, Ponniyin selvan