Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பானுமதி படத்தில் துணை நடிகராக தோன்றிய எம்ஜிஆர்!

பானுமதி படத்தில் துணை நடிகராக தோன்றிய எம்ஜிஆர்!

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

1936 சதிலீலாவதி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான எம்ஜிஆருக்கு தொடர்ந்து சின்னச்சின்ன வேடங்களே கிடைத்து வந்தன. 1947 இல் தனது பதினைந்தாவது படம் ராஜகுமாரியில்தான் பிரதான வேடத்துக்கு வந்தார். அப்படியும் தொடர்ந்து நாயக வேடம் அமையவில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று பிரபலமாக இருக்கும் பல நடிகர், நடிகைகள் துணை நடிகர்களாக இருந்து, தங்களின் திறமையின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள். முதல் படத்திலேயே நாயகனாகி, முதல் படமே வெள்ளிவிழா கண்ட சிவாஜி போல் அனைவருக்கும் சினிமா வாழ்க்கை அமைந்துவிடாது. எம்ஜிஆருக்கே அப்படி அமையவில்லை.

1936 சதிலீலாவதி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான எம்ஜிஆருக்கு தொடர்ந்து சின்னச்சின்ன வேடங்களே கிடைத்து வந்தன. 1947 இல் தனது பதினைந்தாவது படம் ராஜகுமாரியில்தான் பிரதான வேடத்துக்கு வந்தார். அப்படியும் தொடர்ந்து நாயக வேடம் அமையவில்லை. மீண்டும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. ராஜகுமாரிக்குப் பிறகு 1950 இல் மருதநாட்டு இளவரசியில் நடிக்கும்வரை இடைப்பட்ட காலத்தில் பல படங்களில் துணை வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். அதில் முக்கியமானவை நான்குப் படங்கள்.

1. பைத்தியக்காரன் (1947, செப். 26)

2. அபிமன்யு (1948, மே 6)

3. ராஜமுக்தி (1948, அக். 9)

4. ரத்னகுமார் (1948, டிசம்பர் 15)

இந்த நான்கில் கடைசிப் படம் ரத்னகுமாரில் டைட்டில் ரோலில் பி.யூ.சின்னப்பா நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் பானுமதி. எம்ஜிஆர் பலத்தேவன் என்ற சிறிய வேடத்தில் நடித்தார். அவருடன் நாகர்கோவில் மகாதேவன், டி.பாலசுப்பிரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.துரைராஜ், கே.ராதாகிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்டவர்கள் நடித்தனர்.

ஜி.ராமனாதனும், சி.ஆர்.சுப்பாராமனும் இணைந்து இசையமைத்திருந்தனர். அந்தக் காலத்தில் படத்தில் அதிகப் பாடல்கள் வைப்பது பேஷன். எத்தனை அதிகப் பாடல்கள் இருக்கிறதோ, அத்தனைதூரம் படத்திற்கு மவுசு அதிகம். ரத்னகுமாரில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பி.யூ.சின்னப்பாவின் நடிப்பைவிட அவரது குரலுக்கு அதிக ரசிகர்கள் என்பதால் பாட்டு விஷயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை. பாடல்கள் என்றால் டஜன் கணக்கில் இருக்கும்.

ரத்னகுமாரில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் பி.யூ.சின்னப்பா பாடினார். உடன் பாடியவர் நாயகியாக நடித்த பானுமதி. பானுமதிக்கும் நல்ல குரல்வளம். தனது கதாபாத்திரத்துக்கு பாடல் காட்சி இருந்தால் அவர்தான் பாடுவார். இன்னொருவர் அந்த வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியாது. ரத்னகுமாரில், நம் வாழ்வெனும் சோலையில் பாடலை மட்டும் சின்னப்பாவுடன் பி.ஏ.பெரியநாயகி பாடியிருந்தார்.

Also read... கமலின் இயக்கத்தில் வெளியான சாச்சி 420 படமும் ஜானி வாக்கரும்!

ஒன்றரை டஜன் பாட்டு வைத்தும் ரத்னகுமார் ரசிகர்களிடம் எடுபடவில்லை. படத்தைத் தயாரித்த முருகன் டாக்கீஸுக்கு கடும் நஷ்டம். இத்தனைக்கும் படத்தின் கதையை எழுதியவர் பூலோக ரம்பை, மதனகாமராஜன், பக்த நாரதர், சாலிவாகன் போன்ற படங்களுக்கு கதை எழுதிய பி.எஸ்.ராமையா என்ற பத்லகுண்டு சுப்ரமணியன் ராமையா. படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தனர். இந்தப் படத்திற்கு முன்பு அவர்கள் இயக்கிய படம் என்.எஸ்.கிருஷ்ணனின் நல்லதம்பி. இதற்கு அறிஞர் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். படமும் வெற்றி பெற்றது.

பானுமதி நாயகியாக நடித்த ரத்னகுமாரில் துணை வேடத்தில் நடித்த எம்ஜிஆர் பிற்காலத்தில் பானுமதிக்கே ஜோடியாக நடித்தார் என்பது வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: MGR