விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை ‘மேதகு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் கிட்டு என்பவர். இவர் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், நயன்தாரா குறித்தும் மோசமாக விமர்சித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேதகு படம் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. பிரபாகரன் குறித்து நியாயமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என படம் வெளிவரும் முன்பு பலரும் கிட்டுவை பாராட்டினர். இந்நிலையில், சாதி ஆதரவு கருத்து தெரிவித்ததாக கிட்டு சர்ச்சையில் மாட்டினார். பெரியார் குறித்து இழிவாக கிட்டு பதிவிட்டிருந்ததும் தற்போது சர்ச்சையாகி உள்ளது. நயன்தாரா குறித்தும் அப்படியொரு பதிவை அவர் இட்டுள்ளார்.

கிட்டுவின் பதிவு
நயன்தார விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். நயன்தாராவும் அதனை மறைத்ததில்லை. அந்தப் புகைப்படங்களை கீதையின் வாசகத்துடன் இணைத்து கிட்டு முன்பு பதிவிட்டிருந்தார். பெண்கள் குறித்த மேதகு படம் எடுத்தவரின் பார்வை இப்படித்தான் உள்ளது என பலரும் அந்தப் பதிவை பகிர, உடனடியாக தனது சமூகவலைதள கணக்கை பிளாக் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நயன்தாரா போல எத்தனையோ நடிகர்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் இன்னொரு காதலை தேடிப் போயிருக்கிறார்கள். ஆனால், அவர்களை இப்படி யாரும் விமர்சிப்பதில்லை. பெண் என்றால் மட்டுமே விமர்சிக்கப்படுவர்.
மேதகு படம் எடுத்தவரும் இந்த
ஆணாதிக்க சிந்தனைக்கு விதிவிலக்கல்ல.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.