விஜய்யுடன் அடுத்த படம்... மெர்சலாக பேசிய மெர்சல் தயாரிப்பாளர்!

மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

news18
Updated: March 24, 2019, 12:05 PM IST
விஜய்யுடன் அடுத்த படம்... மெர்சலாக பேசிய மெர்சல் தயாரிப்பாளர்!
மெர்சல்
news18
Updated: March 24, 2019, 12:05 PM IST
நடிகர் விஜய் அழைத்தால் அவருடன் சேர்ந்து படம் பண்ண தயார் என்று மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கூறியுள்ளார்.

தெறி வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லியுடன் கூட்டணி அமைத்து விஜய் நடித்த படம் மெர்சல். 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தை தேணாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். மெர்சல் படம் மூலம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் ஆனார் ஹேமா ருக்மணி.  மீண்டும் தேணாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் அவருடைய ஃபோனின் கவரில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.இதையடுத்து ரசிகர் ஒருவர் அவரிடம்,  ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு விஜய் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் இந்தக் கவரை வைத்திருக்கப்போகிறீர்கள், விஜய்யுடன் அடுத்த படம் எப்போது’ என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஹேமா ருக்மணி, ‘தளபதி புகைப்படம் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது ஃபோன் கவர் இது. என்னிடம் இன்னொன்று இருக்கிறது. தளபதி சொன்னவுடனே அடுத்த படம் பண்ண தயார்’ என்று பதிலளித்துள்ளார்.தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியின் இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கலில் ஷேர் செய்து வருகின்றனர்.

Also watch

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...