Ajith: அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர்!

அஜித்

தினேஷ் மனநிலை சரியில்லாதவர். ஏற்கனவே இதே போல் ரஜினிகாந்தின் வீட்டிற்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

  • Share this:
    அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநிலை தவறியவர் என்பதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் அஜித்தின் வீடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் மரக்காணத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர். தினேஷ் மனநிலை சரியில்லாதவர். ஏற்கனவே இதே போல் ரஜினிகாந்தின் வீட்டிற்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் செல்போன் தர வேண்டாம் என தினேஷின் குடும்பத்தினரை, போலீசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் மீண்டும் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    அஜித் தற்போது வலிமை படத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும். போனி கபூர் தயாரிக்கும் வலிமையை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: