எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.சரண் தகவல்..

எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.சரண் தகவல்..
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 2:27 PM IST
  • Share this:
தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி.யின் உடல் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்.பி.பியின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்ட தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நினைவில்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தகவல் தெரிவித்துள்ளார். சரணின் இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டபோது நேரில் அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்காத நிலையில் ஏராளமானோர் இன்று சமாதி அமைந்துள்ள இடத்துக்கு வருகை தந்தனர். பாதுகாப்பற்ற இடம், முட்புதர் நிறைந்த பகுதி பெண்கள் குழந்தைகள் யாரும் வரவேண்டாம் போதிய ஏற்பாடுகளை செய்த பின்னர் வாருங்கள் எனக் கூறி காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.


பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் பாதுகாப்போடு விஜய் ரசிகர்கள், நற்பணி மன்றத்தினர் எஸ்.பி.பி படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அஜித் குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் தாமரைப்பாக்கம் வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading