Vadivelu: 'நாய் சேகர்’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகும் வடிவேலு?

Vadivelu: 'நாய் சேகர்’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகும் வடிவேலு?

வடிவேலு

நடிகர் வடிவேலு ’நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நடிகர் வடிவேலு ’நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் சரியாக சினிமாவில் நடிக்கவில்லை. இருப்பினும் 2006-ஆம் ஆண்டில் வடிவேலு நடித்த ’இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    Enjoy Enjaami: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிரபலங்களின் அசத்தல் நடனம்! – வீடியோ

    அதோடு தலைநகரம், மருதமலை, காவலன், சந்திரமுகி போன்ற படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து அவர் செய்த காமெடி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் வடிவேலு. ‘தலைநகரம்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘நாய் சேகர்’ என்பதையே இப்படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். வடிவேலு நீண்ட காலத்துக்கு பிறகு, இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

    அதே நேரத்தில் வடிவேலு - சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்னையின் போது, தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அதுவும் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மீண்டும் காமெடி களத்தில் வடிவேலு இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: