• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mehreen Pirzada: 'இருவரின் நலன் கருதியே இந்த முடிவு’ பவ்யா பிஷ்னாயுடனான திருமணத்தை நிறுத்திய நடிகை மெஹ்ரீன்

Mehreen Pirzada: 'இருவரின் நலன் கருதியே இந்த முடிவு’ பவ்யா பிஷ்னாயுடனான திருமணத்தை நிறுத்திய நடிகை மெஹ்ரீன்

பவ்யா பிஷ்னாயுடன் மெஹ்ரீன்

பவ்யா பிஷ்னாயுடன் மெஹ்ரீன்

எங்கள் திருமணம் நடைபெறாது. இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்தே எடுத்துள்ளோம். இருவரின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில் தனது திருமணம் நின்று விட்டதாக தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ பட நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடா அறிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஜாடா. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா', தனுஷ் நடித்த 'பட்டாஸ்' ஆகியப் படங்களிலும் நடித்தார்.

    இவரும் ஹரியானாவின் காங்கிரஸ் பிரமுகர் பவ்யா பிஷ்னோயும் காதலித்து வந்தனர். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் தான் இந்த பவ்யா பிஷ்னோய். இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 12-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் மெஹ்ரீன்.

    கொரோனா தொற்றால் இவர்களது திருமணம் தள்ளிப் போனது. பின்னர் இருவரது குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தனர். இந்நிலையில் மெஹ்ரீன் தங்கள் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று விட்டதாக அறிவித்துள்ளார்.



    இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நானும் பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது. எங்கள் திருமணம் நடைபெறாது. இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்தே எடுத்துள்ளோம். இருவரின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவருக்கு என் இதயத்தில் இன்னும் மரியாதை இருக்கிறது. ஆனால், இனி பாவ்யாவுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்விதத் தொடர்பும் இருக்காது. பாவ்யா தொடர்பாக இந்த ஒரே ஒரு அறிக்கையை மட்டுமே நான் வெளியிடுகிறேன்.

    எனது தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து நடப்பீர்கள் என நான் நம்புகிறேன். நான் என் வழக்கமான பணிகளைத் தொடர்வேன். எதிர்காலத்தில் சிறப்பாக வேலை செய்யக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: