ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சினிமாவுக்குள் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ! தேசிய விருது வென்ற இயக்குநருடன் கூட்டணி!

மீண்டும் சினிமாவுக்குள் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ! தேசிய விருது வென்ற இயக்குநருடன் கூட்டணி!

மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ்

ரொமான்டிக் டிராமா ஜேனரில், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் கடந்த 2019-இல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், மீண்டும் சினிமாவுக்குள் வருகிறார். இந்த முறை தேசிய விருது பெற்ற இயக்குனருடன் ரங்கராஜ் கூட்டணி அமைத்திருக்கிறார்.

    ரொமான்டிக் டிராமா ஜேனரில், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் கடந்த 2019-இல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்பின் மூலமாக, ரசிகர்களை கவர்ந்திருந்தார் படத்தின் ஹீரோ.

    இந்த படத்திற்கு பின்னர், கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பெண்குயின் படத்தில் ரங்கராஜ் இடம்பெற்றிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பின்னர் நடிப்பதற்கு தற்காலிக ஓய்வு அளித்து, தன்னுடைய கேட்டரிங் சர்வீஸ் மூலமாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்றார் ரங்கராஜ்.

    'கல்யாணமா? எனக்கே சொல்லல..' பொதுவெளியில் சகோதரரை இழுத்துவிட்டு பஞ்சாயத்து செய்த ரகுல்ப்ரீத் சிங்!

    குறிப்பாக விக்ரம் பட வெற்றி விழாவுக்கு, இவரது சமையல் குழு தான் கேட்டரிங் சர்வீஸ் செய்திருந்தது. இது தொடர்பாக வெளிவந்த உணவு மெனு, சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில், அதன் பின்னர் பல்வேறு யூட்யூப் சேனல்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக ரங்கராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக சீனு ராமசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் தன்னுடைய புதிய படம் குறித்த அறிவிப்பை கூறியிருக்கிறார்.

    திருமணத்துக்கு தயாராகும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா!

    சீனு ராமசாமியுடன் இணையும் படம், ரொமான்டிக் டிராமா பிரிவில் உருவாக உள்ளது. இந்த படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும், படத்தின் ஷூட்டிங்கில் இணைய மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் ரங்கராஜ் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood