ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கணவருக்குக் கிடைத்த ஃபிலிம்பேர் விருதுடன் உருக்கமாக பதிவிட்ட மேகனா ராஜ்

கணவருக்குக் கிடைத்த ஃபிலிம்பேர் விருதுடன் உருக்கமாக பதிவிட்ட மேகனா ராஜ்

குழந்தையுடன் மேகனா ராஜ்

குழந்தையுடன் மேகனா ராஜ்

நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பேபிம்மா. நீங்கள் யார் என்பதில் நேர்மையாக இருந்ததற்கு இது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மறைந்த தனது கணவருக்குக் கிடைத்த ஃபிலிம்பேர் விருதுடன் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மேகனா ராஜ்.

  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

  சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தையே உலுக்கியது. அவர் இறக்கும் போது, மேக்னா கர்ப்பமாக இருந்தார். இது ரசிகர்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் சில மாதங்கள் கழித்து மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என்று பெயர் வைத்தார். இதனையடுத்து, மேக்னா தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
   
  View this post on Instagram

   

  A post shared by Meghana Raj Sarja (@megsraj)  நடந்து முடிந்த ஃபிலிம் ஃபேர் சவுத் 2022 விழாவில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரின் மனைவி மேக்னா ராஜ் பெற்றுக்கொண்டார். இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள மேக்னா, ”சிரு... உங்களின் பிளாக் லேடி இறுதியாக வீட்டிற்கு வந்து விட்டாள். இதை எப்படி உணருகிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால் இதைப் பெற்றதும் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்துருப்பீர்கள் என்பது என் மனதில் இருக்கிறது. நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பேபிம்மா. நீங்கள் யார் என்பதில் நேர்மையாக இருந்ததற்கு இது. மக்கள் உங்களை அதிகம் நேசித்துள்ளார்கள். அதனால் தான் நீங்கள் இதை பெற்றிருக்கிறீர்கள். இப்போதும் கூட நம்மைச் சுற்றி அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றன” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published: