Home /News /entertainment /

திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ‘மேகம் கருக்காதா…’ வீடியோ பாடல் வெளியீடு…

திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ‘மேகம் கருக்காதா…’ வீடியோ பாடல் வெளியீடு…

தனுஷ் - நித்யா மேனன்

தனுஷ் - நித்யா மேனன்

கடந்த சில மாதங்களாக ஆக்சன் ஜேனரில் வெளிவந்த படங்கள் மட்டுமே அதிக வசூலை குவித்தன. அந்த ட்ரெண்டை திருச்சிற்றம்பலம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து சூப்பர் ஹிட்டான மேகம் கருக்காதா வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தனுஷ் படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்று சினிமா வர்த்தக வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தப் படம் கடந்த மாதம் 18-ம்தேதி வெளியான நிலையில், இதற்கு பின்னர் திரைக்கு வந்த படங்கள் ரசிகர்களின் விருப்பத்தை பெற தவறிவிட்டன.

படத்தில் இடம்பெற்ற தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.



ஒரு ஃபீல் குட் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது என்பது இதுவே முதல் முறையாகும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள். அனிருத் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் மிகவும் பிரபலமான மேகம் கருக்காதா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடல் அதிக எண்ணிக்கையில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆக்சன் ஜேனரில் வெளிவந்த படங்கள் மட்டுமே அதிக வசூலை குவித்தன. அந்த ட்ரெண்டை திருச்சிற்றம்பலம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஹாலிவுட் படமான தி கிரே மேனின் அடுத்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார் தனுஷ்.

Anushka: விஜய் டிவி சீரியலை பாராட்டிய அனுஷ்கா... மகிழ்ச்சியை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட நடிகை!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29-ஆம்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜழ இசையமைத்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி