ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

200 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா!

200 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா!

வால்டர் வீரய்யா

வால்டர் வீரய்யா

மெகா ஸ்டார் ரசிகர்களின் உற்சாகத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 25 ஃபேன் ஷோக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் மற்றும் படத்தின் கதை காரணமாக மேற்கூறிய மொத்த வசூலில் பாதிக்கும் மேல் முதல் மூன்று நாட்களில் வசூலானது. பாபி கொல்லி இயக்கிய வால்டர் வீரய்யா படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.108 கோடி வசூலித்தது.

அமெரிக்காவில் இதுவரை இப்படம் 2.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அங்குள்ள மெகா ஸ்டார் ரசிகர்களின் உற்சாகத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 25 ஃபேன் ஷோக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு நிகழ்ச்சிகளின் போது, ஜூம் கால் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார் சிரஞ்சீவி. அப்போது ஜனவரி 13-ம் தேதி வெளியான தனது படத்துக்கு 2.25 ரேட்டிங் கொடுத்த ஊடகங்களை சாடினார். "அவர்கள் நமது படத்திற்கு 2.25 ரேட்டிங்கை கொடுத்தனர். ஆனால் படம் அமெரிக்காவில் 2.25 மில்லியன் வசூலித்துள்ளது" என்றார்.

இதற்கிடையே சிரஞ்சீவியின் போலோ ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மே மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Telugu movie