தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் எந்தப் படமும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான மாறன் திரைப்படம் பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்தது.
இதற்கிடையே, ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட தி கிரே மேன் படத்தில் இருந்து, தனுஷின் ஸ்டில் ஒன்று வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிரித்தது.
தற்போது தனுஷ் ரசிகர்கள் அவரது திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளனர். மித்ரன் ஜவகர் இயக்கும் இந்த படத்தில் ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள்.
Also Read : இவருடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினம்... பிரியா பவானி சங்கர்.!
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷுடன் அனிருத் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
Also Read : கிளாமரில் கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்..
எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் படங்களின் வெளியீடு காரணமாக திருச்சிற்றம்பலம் படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் சன்பிக்சர்ஸ் அளிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், ஜூலை மாதம் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க - வாலி படத்தின் ரிமேக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி
தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கர்ணனுக்கு பிறகு தனுஷுக்கு எந்தப் படமும் வரவேற்பை பெறாத நிலையில், திருச்சிற்றம்பலத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.