நித்யானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல நடிகை ஆசை... பயணச்செலவை ஏற்பதாக விஜய் ரசிகர்கள் ட்வீட்..

நித்தியானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். சீக்கிரம் செல்லுமாறும் பயணச்செலவுக்கு பணம் தருவதாகவும் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். கைலாசா களைகட்டுமா?

  • Share this:
நானொரு பரதேசிங்கையா.. பிச்சைக்காரன், எச்ச சோறு.. என்றேல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கிவரும் சாமியார் நித்யானந்தா.. இப்போதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் மீரா மிதுன், சென்னை, மும்பை என சுற்றிக்கொண்டு உச்ச நட்சத்திரங்களின் குடும்பத்தினரை ஏடாகூடமாக பேசி நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் ஊடக வெளிச்சத்தில் மிதப்பவர்.

நித்யானந்தாவின் தனி நாடான கைலாசாவிற்கென பிரத்யேகமாக நாயணங்கள் வெளியிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இது குறித்து சிலர் விளையாட்டாகவும், சிலர் விபரீதமாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


படிக்க... கைலாசாவில் நிலம் வேண்டும்; நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம்

எப்போதும் பிரபலங்களை வறுத்தெடுத்து, பிரபலமாக துடிக்கும் மீரா மிதுனும் இதில் சேர்ந்துள்ளார். மற்றவர்கள் நித்தியின் ஹேர் ஸ்டைல், கைலாசா அறிவிப்பு, நாணயம் வெளியீடு பற்றி பேசிகொண்டிருக்க, மீரா மிதுன் கைலாசாவிற்கே செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
அனைவரும் அவரை கிண்டல் செய்தார்கள், அனைவரும் அவரை விளாசினார்கள், அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். ஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார் என நித்தி பற்றி டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும், தானும் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன், லாட்ஸ் ஆஃப் லவ் என்றும் தெரிவித்துள்ளார்.

மீரா மிதுன் சும்மா ஏதாவது டிவிட் செய்தாலே அவரை, அவர் பாணியிலேயே ரசிகர்கள் ஏடாகூடமாக விமர்சிப்பார்கள். தற்போதோ விஜய், சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து, அவர்கள் ரசிகர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.

கைலாசா டிவிட்டை பார்த்ததும் சும்மா இருப்பார்களா? இனிப்பில் ஈ மொய்யப்பதுபோல் குவிந்துவிட்டார்கள். தயவு செய்து எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக போய்விடுங்கள் என விஜய், சூர்யா ரசிகர்கள் டிவிட் செய்து வருகின்றனர். மேலும், பயணச் செலவுக்கு தாங்களே காசு தருவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.


மீரா மிதுன் கிளம்பினால் தமிழ்நாடு சொர்க்கமாகும், கைலாசா நரகமாகும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சிலர் ஒருபடி மேலே போய், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான், ஒன்றாக சேர்ந்தால் கலைகட்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க...லாட்ஸ் ஆஃப் லவ்... கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளது - நடிகை மீராமிதுன்

 

தான் எங்கிருக்கிறோம் என்றே கண்டுபிடிக்க முடியாதவர்கள், தான் அறிவித்த நாட்டை எங்கே கண்டுபிடிக்கக் போகிறார்கள் என்ற தைரியத்தில் அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார் நித்தி. ஒரு வேளை கைலாசா என்ற நாடு இருந்து, அங்கு நித்தி இருந்து, அங்கு மீரா மிதுன் சென்றால்... நிச்சயம் கலைகட்டும் என்பதில் ஐயமில்லை.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading