• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுதிட்ட மீரா மிதுன்

சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுதிட்ட மீரா மிதுன்

மீரா மிதுன்

மீரா மிதுன்

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமின் பெற்ற நடிகை மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்.

  • Share this:
    தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் அறியப்பட்டவர் மீரா மிதுன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். சர்ச்சையான கருத்துக்கள் கூறுவதும், நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு கூறுவதும், அதனால் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல.

    பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
    இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    காவல்துறை சம்மனுக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்தார். அதனைத்தொடர்ந்து கேரளா சென்று மீராமிதுனை தமிழக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    இவர்களுக்கு கடந்த புதன்கிழமை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனையடுத்து காலை 10.30 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான மீரா மிதுன், சைபர் கிரைம் பிரிவில் கையெழுத்திட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: