த்ரிஷா பற்றி பரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன்

நடிகை த்ரிஷா குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

த்ரிஷா பற்றி பரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன்
த்ரிஷா | மீரா மிதுன்
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற மீராமிதுன் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் சக நடிகைகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா தன்னைப் பார்த்து காப்பியடிப்பதாக அதிரடியாக குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது நடிகை த்ரிஷா குறித்த விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் மீரா மிதுன் கூறியிருப்பதாவது, “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இதே த்ரிஷாவை பீட்டா உறுப்பினர் என்பதால் எல்லோரும் தூற்றினீர்கள். இன்றைக்கு நான் த்ரிஷா மீது குற்றம்சுமத்தும் போது நான் உங்களுக்கு கெட்டவளாகத் தெரிகிறேன். த்ரிஷாவை இப்போது நீங்கள் எல்லோரும் சேர்ந்து நல்லவராக காட்டுகிறீர்கள்.

பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவர் அனைத்து பிராணிகள் மீதும் அக்கறை செலுத்தினாரா? இன்று வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடு, கோழிகள் வெட்டப்படுகின்றன. அதற்கெல்லாம் அவர் குரல் கொடுத்தாரா? நம் நாட்டு காளைகள் தான் உயிரினமாக தெரிகிறதா. அதன் மீதுதான் அவர் குறி வைக்கிறாரா?


அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவருடைய அம்மா தான் மன்னிப்பு கேட்டார். நெப்போட்டிசம் என்பது சாதியிலிருந்து தான் வருகிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். த்ரிஷா திரைத்துறைக்குள் வந்தது, இன்று வரை அவர் தன்னை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் உயர்சாதி என்பதுதான்.நான் பெரியார் பற்றி ஒரு ட்வீட் போட்டேன். அதைக்கூட நீங்கள் எல்லோரும் கிண்டலடித்தீர்கள். சாதியால் வரக்கூடிய நெப்போட்டிசம் அழிய வேண்டும் என்பதற்காகத் தான் பெரியார் அவ்வளவு பாடுபட்டார். போராடினார். நீங்கள் பெரியார் பிறந்த பூமி, பெரியார் மண் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இப்போது யாருக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

சாதியால் வரக்கூடிய நெப்போட்டிசம் அழிய வேண்டும் என்றால் இன்னொரு பெரியார் பிறந்துதான் இதை மாற்ற வேண்டும் என்றால் பெரியாரை பின்பற்றுவராக நானே உருவெடுத்து இவை அனைத்தையும் நானே மாற்றிக் காட்டுவேன்” என்று மீரா மிதுன் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading