ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீரா மிதுனை காணவில்லை.. கண்டுபிடிக்க கோரி தாயார் போலீசில் புகார்!

மீரா மிதுனை காணவில்லை.. கண்டுபிடிக்க கோரி தாயார் போலீசில் புகார்!

மீரா மிதுன்

மீரா மிதுன்

மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

  நடிகை மீரா மிதுன் மாடலிங் துறையில் இருந்தவர். ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் மீரா நடித்து இருப்பார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.அதிலும் சர்ச்சை போட்டியாளராக தான் வலம் வந்தார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஆல்பம் பாடல்கள் வெளியிடுவது, வீடியோக்கள் , லைவ் என யூடியூப்பில் பிஸியாக இருந்த மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார்.

  அடிக்கடி இடத்தை மாற்றும் மீரா மிதுன்... கைது செய்யாத காவல்துறை மேல் நீதிபதி அதிருப்தி

  இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்த அந்த விவாகரத்தில் மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.  மீரா மிதுன் செல்போன் நம்பரை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

  நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் பதுங்கல்.. விரைந்து கைது செய்ய போலீஸ் தீவிரம்

  இதனால் மத்திய குற்றப்பிரிவு - ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் தனது மகள் மீரா மிதுனை சில நாட்களாக காணவில்லை என்றும் அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டு அவரை கண்டுப்பிடித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Meera Mithun, Kollywood, Tamil Cinema